மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனி கேட்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் அகியோரது அதிரடியான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 

Advertisement

இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

அதேபோல் இத்தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் டிரைக்கர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 42 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தண்டர் அணியால் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் மெக்ராத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

இதன் மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர் மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News