இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 51 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 48 ரன்களையும், விஷ்மி குணரத்னே 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற  வீரங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய சமாரி அத்தபத்து, “இன்றைய ஆட்டத்திற்கு இந்திய அணியைத்தான் பாராட்ட வேண்டும். 300+ ரன்களை துரத்துவது எப்போதும் எளிதல்ல, இருப்பினும் நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம். அதேசமயம் எங்களுடைய பந்துவீச்சு பிரிவும் இந்திய பேட்டர்களுக்கு எதிராக  தடுமாறியது. 

Also Read: LIVE Cricket Score

அதனால் உலகக் கோப்பைக்கு முன் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இவை. இத்தொடர் முழுவது நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரிக்கு குறைவாகவே இருந்தோம். அதனால் பல வாய்ப்புகளை தவறவிட்டோம். பேட்டிங்கில் சில பவர்-ஹிட்டர்கள் தேவை, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நாங்கள் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். மேலும் இதற்காக தீவிர பற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முன் சில பகுதிகளில் நாம் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News