இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு டையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டி தடைபட்டது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரூதர்ஃபோர்ட் 74 ரன்களையும், கேசி கார்டி 37 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதனால் இலங்கை அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

பின்னர் நிஷான் மதுஷ்காவுடன் இணைந்த கெப்டன் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.  இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் மதுஷ்கா 69 ரன்னிலும், சரித் அசலங்கா 77 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, ஜனித் லியானகே 18 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் இலங்கை அணி 31.5 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்து அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்த இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய விண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்,  “இப்போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக எங்களால் போதிய ரன்களைச் சேர்க்க முடியாமல் போனது. ஆனால் இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, எதில் கவனம் செலுத்த முடியுமோ அதில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும், அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

எங்கள் இன்னிங்ஸின் பிற்பகுதியில் ஷெர்ஃபேன் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் சிறப்பாது பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால் இலங்கை அணி பேட்டிங் செய்யும் சமயத்தில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக நாங்கள் பந்து வீசுவது கடினமாக இருந்தது, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு. அடுத்த முறை சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்த

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News