நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக முன்னேறி வருகிறோம்- ரிஷப் பந்த்!

Updated: Fri, Mar 28 2025 10:17 IST
Image Source: Google

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிரங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட்47 ரன்களையும், அனிகெத் வர்மா 36 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் 70 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரிஷப் பந்த், “இப்போட்டியில் வெற்றிபெற்றது நிம்மதியளிக்கிறது.  ஒரு அணியாக, கட்டுப்படுத்த முடியாதவற்றில் கவனம் செலுத்த முடியாது, என் வழிகாட்டி கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார், அதைத்தான் நான் இப்போட்டியில் செய்தேன். பிரின்ஸ் யாதவ் பந்துவீசிய விதத்தைப் பார்க்கும் போது சிறப்பாக இருந்தார். அதேபோல் ஷர்தூல் தாக்கூரும் மிக நன்றாக பந்துவீசினார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்த ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரனை மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கியுள்ளது, நாங்கள் அவருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் நன்றாக பேட்டிங் செய்து, நமக்காக அற்புதமாக விளையாடும் போது அவருக்கு தேவையான சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும். அணி சிறப்பாக முன்னேறி வருகிறது, இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை