நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Wed, May 22 2024 13:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீடை நடத்தின. இப்போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நான்காவது முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியானது , கேகேஆர் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் அடித்தார். கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கேப்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெறும் 13.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களும் விளாசினர்.

இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன், “இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றது எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது. சரியான நேரத்தில் எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து விளையாடி வருவதால் வீரர்களுக்கு சரியான ஓய்வு என்பது இந்த தொடரில் மிகவும் முக்கியம்.

குறிப்பாக ஒவ்வொரு நகரத்திற்கும் மாறி மாறி நாடு முழுவதும் சென்றுள்ளோம். இந்த வெற்றி சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னும் இறுதிப் போட்டி இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியம். எங்கள் அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளாரும் இன்று சரியாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார்கள். அதிலும் அவர்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு தேவையானதாக இருந்தது. 

இப்போட்டியில் எங்கள் அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களுடைய மனநிலையும் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் மட்டும் தான் இருந்தது.  எங்கள் வீரர்களின் மனவலிமை அபாரமாக இருந்தது. இந்த தொடரில் யாரும் எந்த அணியும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இது குர்பாஸின் முதலாவது ஆட்டமாகும்.  அவர் சரியான நேரத்தில் வந்து எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார். ஆதனால் நாங்கள் அதே ரன் விகிதத்தில் பயணிக்க விரும்பினோம். எங்ககு தமிழ் தெரியாது. ஆனால் புரியும். வெங்கடேஷ் ஐயர் என்னிடம் தமிழில் தான் பேசினார். அவர் பேசுவதை நான் புரிந்து கொள்வேன். பதிலுக்கு நான் ஹிந்தியில் பேசுவேன். இறுதிப் போட்டியில் நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், மேலும் நாங்கள் எங்களால் சிறந்ததை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை