பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் - முகமது ரிஸ்வான்!

Updated: Thu, Nov 14 2024 21:54 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்ற் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ், “இப்போட்டியில் வெற்றிபெற்றது உண்மையிலேயே அருமை. சில சமயங்களில் இன்றிரவு நாங்கள் ஒரு விளையாட்டைப் பெறுவோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் சிறப்பாகச் செய்தோம் - முதல் வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி. கடந்த வாரம் ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியதால் அதைச்சுற்றி விமர்சனங்கள் இருந்தது. இன்று இரவு அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஏனெனில் குறைந்த இலக்கை துரத்தும் போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “இந்த மாதிரியான போட்டியில் வெற்றி எந்த பக்கம் என்று எதுவும் சொல்ல முடியாது. விஷயம் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தது. பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கிளென் மெக்ஸ்வெல்லிற்கு எனது பாராட்டுகள். இந்தப் போட்டி மட்டுமல்லாம், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இதனைச் செய்து வருகிறார். அடுத்த போட்டி நடைபெறும் சிட்னியில் நாங்கள் வெற்றிக்கு எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை