களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம் - ரோஹித் சர்மா

Updated: Wed, Aug 03 2022 13:07 IST
Image Source: Google

இரு அணிகளும் மோதிய 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 164/5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களிலேயே 165/3 ரன்களை சேர்த்து வெற்றி கண்டது.

இரண்டாவது டி20 போட்டியும் இதே வார்னர் பார்க் மைதானத்தில் தான் நடைபெற்றது. அப்போது இந்திய அணி நிர்ணயித்த 138 ரன்களை கூட அடிக்க முடியாமல் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஓவரில் தான் எட்ட முடிந்தது. ஆனால் இந்தியா அணி நேற்று 165 ரன்கள் என்ற இலக்கை வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில்,“வெளியில் இருந்து பார்க்கும் போது நாங்கள் எந்தவித ரிஸ்க்-கும் எடுக்காமல் சுலபமாக வென்றது போன்று தெரியலாம். ஆனால் மிடில் ஓவர்களில் மிக முக்கியமான செயல்பாடுகளை இந்திய பவுலர்கள் மேற்கொண்டிருந்தனர். களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம். வேரியேஷன்களை காட்டினோம்.

பேட்டிங்கிலும் சீரான வேகத்தில் ரன்கள் வந்தன. 165 ரன்கள் என்ற இலக்கு இந்த களத்தில் மிகவும் கடினமான ஒன்றாகும். மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுலர்களுக்கு சாதகமாக பிட்ச் இருப்பதால் சரியான ஷாட்களை பயன்படுத்த வேண்டும். அதனை சூர்யகுமார் யாதவ் செய்தார். இப்படி தான் வெற்றி சாத்தியம் ஆனது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::