இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Advertisement

இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது 26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் தற்போது இந்திய அணியின் நம்பர்-1 டி20 பந்து வீச்சாளராக உள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளர். மேலும் அவர் 21 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

இதுபோன்ற சூழ்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுமட்டுமின்றி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் தனது பயிற்சி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங், “இன்றைய பயிற்சி அமர்வைப் பொறுத்தவரை, எனது ஒரே உந்துதல் சரியான இடத்தில் பந்துவீசுவது மட்டும் தான். ஏனெனில் எனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது, சிவப்பு பந்து கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பதை நான் சரி பார்க்கிறேன். ஏனெனில் அனைத்து வீரர்களும் நீண்ட காலமாக வெள்ளை பந்தை வைத்து விளையாடி வருகின்றனர். அதனால் நான் இந்த பயிற்சியை மிகவும் ரசித்தேன்.

நாம் படிப்படியாக முன்னேறிச் செல்லும்போது, ​​தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும், மேலும் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம்.  பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தனர், மேலும் அவர்களிடம் போட்டி மனப்பான்மையும் இருந்தது. நாங்கள் எங்களின் ரிதமிம் மட்டுமே வேலை செய்தாலும், அவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டனர். அதனால் அது இன்னும் வேடிக்கையாக இருந்தது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதனால் நாங்கள் சரியான திட்டத்துடன் அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியிருந்தது. சாய் முதல் முறையாக அணியில் இணைந்துள்ளார், அவரும் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தார். கேப்டனும் நல்ல ஃபார்மில் தொடர்பில் இருந்தார். அதனால் நன் தொடர்ந்து முன்னேறவும், அவர்களை அடிக்கடி வெளியேற்றவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News