போட்டியில் பந்தை தான் பார்போம்; பந்துவீச்சாளர்களை அல்ல - ஜோ ரூட் தடாலடி!

Updated: Wed, Sep 01 2021 16:33 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. 

இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீச்சிலூன் சரி, பேட்டிங்கிலும் சரி அஸ்வின் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அஷ்வினுக்கு எதிராக வைத்துள்ள திட்டம் குறித்து பேசுகையில் “அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய வீரர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்.

எங்களுக்கு எதிராக அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி ரன்களையும் எடுத்துள்ளார். அவரது திறமையை நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். எனவே அதற்கேற்ப தற்போது அவருக்கு எதிராக விளையாட தயாராக உள்ளோம். அஸ்வின் சிறப்பான பவுலர் தான், ஆனால் அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

போட்டியின் போது எந்த பந்துவீச்சாளர் பந்து வீசினாலும் சரி அவர்களுக்கு எதிராக ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை, அதை நாங்கள் சரியாக செய்வோம். பந்தை மட்டுமே பார்ப்போமே தவிர நாங்கள் பந்துவீசும் பவுலரின் வரலாறுகளை பார்க்க மாட்டோம்” என்று தடாலடியாக பதிலளித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை