வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு அபராதம் வித்தித்த ஐசிசி; காரணம் என்ன?

Updated: Thu, Jun 19 2025 14:39 IST
Image Source: Google

West Indies Cricket: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அலியா அலீன் மற்றும் கியானா ஜோசப் ஆகியோர் ஐசிசி நடத்தை விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அலிய அலீன் மற்றும் கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டி நடுவர்களின் முடிவை ஏற்க மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இது வீரர்களின் முதல்நிலை குற்றமாக கருதப்படுகிறது. 

அந்தவகையில் கள நடுவர்கள் அவுட் என தீர்ப்பளித்த பிறகும் அதனை ஏற்க மறுத்து மைதானத்தி விட்டு வெளியேற தாமதப்படுத்தியதாக அலியா அலீனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரது ஒழுக்காற்று பதிவில் ஒரு குறைப்பு புள்ளியும் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேசயம் இதே குற்றத்திற்காக கியானா ஜோசபிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதமும், இரண்டு குறைப்பு புள்ளிகளும் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கியானா ஜோசப் நடுவரின் முடிவை ஏற்க மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கு இந்த கூடுதல் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலியா அலீன் மற்றும் கியானா ஜோசப் இருவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை