WI vs ENG, 1st Test (Day 1 Lunch): முதல் இன்னிங்ஸிலேயே தடுமாறும் இங்கிலாந்து!

Updated: Tue, Mar 08 2022 21:59 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ரிச்சர்ட்ஸ் - போத்தம் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ், ஸாக் கிரௌலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 13, டேனியல் லாரன்ஸ் 20 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - ஜானி பேர்ஸ்டோவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை