ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Wed, May 19 2021 15:16 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் 15 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளையாடவுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பதிலாக, மேலும் இரண்டு டி20 போட்டிகளை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளது. 

இதனால் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி, 7 டி20, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர்களில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ்  அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேன் பொல்லார்ட் தலைமையிலான இந்த அணியில், அதிரடி வீரர்கள் கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரஸ்ஸல், லெண்டல் சிம்மன்ஸ், டுவைன் பிராவோ என டி20 ஸ்பெஷலிஸ்ட்டுகள் இடம்பிடித்துள்ளனர். 

நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ள கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு தயாராகி வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி: கீரேன் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், பிடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், எவின் லூயிஸ், ஒபெட் மெக்காய், ஆண்ட்ரே ரஸ்ஸல், லென்ட்ல் சிம்மன்ஸ் , ஓஷேன் தாமஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை