புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் - காணொளி!

Updated: Fri, Jul 19 2024 14:21 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ( ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை தொடங்கும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெவின் சின்க்ளேர் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 39 ரன்களைச் சேர்த்து விளையாடி வந்த சமயத்தில் பந்துவீசிய கெவின் சின்க்ளேர் அவரது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக அவர் குட்டிகரணம் அடித்த நிகழ்வானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இந்நிலையில் தனது கொண்டாட்டம் குறித்து விளக்கமளித்துள்ள் சின்க்ளேர், “நான் எங்கிருந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பதற்க்கு, அதுதான் எனது முத்திரை கொண்டாட்டம். அதனால் எனக்கு எப்போதெல்லாம் விக்கெட் கிடைகிறதோ அப்போதெல்லாம் இதனை செய்கிறன. இது அனைத்தும் எனது எட்டு வயதில் இந்து தொடங்கியது, பின்புற தோட்டத்தில் அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்துள்ளேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், பல ஆண்டுகளாக நான் அதைச் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக கெவின் சின்க்ளேர் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அச்சயமத்தில் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்து விக்கெட் வீழ்த்திய கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போதும் அவரது காணொளி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை