வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அந்த அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேபாள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் இவ்விரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடர் செப்டம்பர் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக கடந்தாண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியானது நேபாள் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தது. இதனையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதிபெற்றுள்ள நிலையில், நேபாள் அணியானது தகுதிச்சுற்றின் அடிப்படையில் தகுதிபெரும் வாய்ப்பில் உள்ளது. 

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தொடர் வெறும் சர்வதேச போட்டிகளின் தொகுப்பை விட அதிகம் - இது விளையாட்டின் விரிவடைந்து வரும் உலகளாவிய தடத்தின் கொண்டாட்டம் மற்றும் கிரிக்கெட் எதைக் குறிக்கிறது என்பதற்கான சான்றாகும்: பெருமை, நோக்கம் மற்றும் ஒற்றுமையின் சக்தி. ஒரு முழு உறுப்பினர் நாடாக, நமது எல்லைகளுக்கு அப்பால் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பது நமது பொறுப்பின் ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம்” என்று கூறிவுள்ளது.

Also Read: LIVE Cricket Score

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News