டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 28 2021 13:08 IST
West Indies vs Bangladesh, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியை இருமுறை வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ். நடப்பு சாம்பியனாக இருந்தபோதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இரு தோல்விகளுடன் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், ஹெட்மையர், பொலார்ட், ரஸ்ஸல், பிராவோ என டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ், பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லெண்டில் சிம்மன்ஸ் 35 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வலியை அதிகமாக்கியிருக்கிறார். 

ஷார்ஜாவில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் இன்னொருமுறை தோல்வியடையும் அணி அரையிறுதிக் கனவை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டியது தான். 

சூப்பர் 12 சுற்றில் விளையாடுகிற 5 ஆட்டங்களில் 3-ல் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு எப்படிக் கிடைக்கும்? எனவே வங்கதேசத்துக்கு எதிராகக் கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 12
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
  • வங்கதேசம் வெற்றி - 5
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - லெண்டல் சிம்மன்ஸ்/ ரோஸ்டன் சேஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன் /ஆண்ட்ரே பிளெட்சர், கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஹேடன் வால்ஷ், ரவி ராம்பால்.

வங்கதேசம் - முகமது நைம், லிட்டன் தாஸ்/ சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன்/ ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், மேஹதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மத்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம்
  • பேட்டர்ஸ் - நைம் ஷேக், மஹ்முதுல்லா, ஷிம்ரான் ஹெட்மையர், எவின் லூயிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - மேஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன், டுவைன் பிராவோ
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மத், அகீல் ஹொசைன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை