கரோனா அச்சுறுத்தல்: விண்டீஸ் vs அயர்லாந்து போட்டி ஒத்திவைப்பு!

Updated: Tue, Jan 11 2022 12:51 IST
West Indies vs Ireland 2nd ODI Postponed After 2 Covid Cases (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அயர்லாந்து அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இப்போட்டியை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.

மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள இப்போட்டிக்கான மாற்று தேதியை தீர்மானிக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக ஆலோசித்தி வருகின்றனர். 

முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை