வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 20 2022 21:03 IST
West Indies vs Ireland, T20 World Cup, Round 1 - Cricket Match Prediction, Where To Watch, Probable (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாஅக் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

அதன்படி நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஹாபர்ட்டில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு சீசனின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் படுதோல்வியைச் சந்தித்தாலும், ஜிம்பாப்வேவுடனான இரண்டாவது போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கைல் மேயர்ஸ், ஷமாரா ப்ரூக்ஸ், பூரன் ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், ஒபெத் மெக்காய் என அனைவரும் சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் தீவிரம் காட்டி வருகிறது. அணியில் பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதேசமயம் கர்டிஸ் காம்பெர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி வருவது அணிக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவருடன் மார்க் அதிர், ஜோஷுவா லிட்டிலும் இருப்பது அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -  1
  • வெஸ்ட் இண்டீஸ் - 1
  • அயர்லாந்து - 0

உத்தேச அணி 

வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேத் மெக்காய்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், சிமி சிங், பாரி மெக்கார்த்தி, ஜோஷூவா லிட்டில்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - லோர்கன் டக்கர்
  • பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ஷமர் ப்ரூக்ஸ், ஹாரி டெக்டர்
  • ஆல்-ரவுண்டர்கள் - கர்டிஸ் கேம்பர், கைல் மேயர்ஸ், ஜார்ஜ் டோக்ரெல்
  • பந்துவீச்சாளர்கள் - ஒடியன் ஸ்மித், மார்க் அதிர், ஜோசுவா லிட்டில்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை