SA vs WI, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Jun 26 2021 12:08 IST
CRICKETNMORE

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 26) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம்: தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  • நேரம்: இரவு 11.30 மணி

போட்டி முன்னோட்டங்கள்

வெஸ்ட் இண்டீஸ் 

சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கீரென் பொல்லார்ட் தலைமையில் ஒருநாள், டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறது. 

அதிலும் கெய்ல், ரஸ்ஸல், பூரன், ஹெட்மையர், லீவிஸ் என அதிரடி பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதால் மற்ற அணிகளை விடவும் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் அபாயகரமான அணியாக சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வருகிறது. 

அதேபோல் பந்துவீச்சில் ஓஷேன் தாமஸ், டுவைன் பிராவோ ஆகியோருடன் ஃபாபியன் ஆலனும் உள்ளதால் இந்த கூட்டணி நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அணியில் டி காக், டேவிட் மில்லார் ஆகியோர் மிக்கிய வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அசத்துவர் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது உறுதி.

இருப்பினும் டெஸ்ட் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து டி20 தொடரைக் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 10
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 4
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 6

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - லெண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்.

தென் ஆப்பிரிக்கா - ஜேன்மேன் மாலன், ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி கோக், டெம்பா பவுமா (கே), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஜேன்மேன் மாலன், டேவிட் மில்லர், ராஸி வான் டெர் டுசென்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரோன் பொல்லார்ட்
  • பந்து வீச்சாளர்கள் - ஒஷேன் தாமஸ், காகிசோ ரபாடா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை