வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

Advertisement

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் ஏறக்குறைய தீர்மானிக்கும் 4ஆவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை1) நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  •     இடம்: தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  •     நேரம்: இரவு 11.30 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் 

Advertisement

தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவத்ய் போட்டியில் தோல்வியைத் தழுவி தற்போது தொடரை இழக்கும் கட்டத்தில் உள்ளது. 

எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரஸ்ஸல், ஆண்ட்ரே ஃபிளட்சர்  என அதிரடி வீரர்கள் அணியில் இருந்த போதிலும் அவர்களால் எதிரணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டிபிடிக்க முடியவில்லை. 

பந்துவீச்சை பொறுத்தவரை ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், இனி வரும் போட்டியிலும் அவர்களது பந்துவீச்சு எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Advertisement

நாளைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடையும் பட்சத்தில், டி20 தொடரை இழக்கும் என்பதால், இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் அபாரமாக விளையாடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

Advertisement

அணியின் பேட்டிங் வரிசையில் குயின்டன் டி காக், வென் டர் டுசென் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.  

பந்துவீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவது அணிக்கு கிடைத்த கூடுதல் பலம். இதனால் நாளைய போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 13
  •  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 5
  •  தென் ஆப்பிரிக்க வெற்றி - 8
Advertisement

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - லிண்டெல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், கெவின் சின்க்ளேர்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி கோக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

Advertisement

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - லெண்டெல் சிம்மன்ஸ், சிம்ரான் ஹெட்மையர், எவின் லூயிஸ், ராஸி வான் டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - ஃபேபியன் ஆலன், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்து வீச்சாளர்கள் - ஓபேட் மெக்காய், தப்ரைஸ் ஷம்ஸி, காகிசோ ரபாடா / அன்ரிச் நோர்ட்ஜே

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News