தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!

Updated: Fri, Oct 01 2021 13:38 IST
Image Source: Google

ஐபிஎல் 14ஆவது சீசனில் இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3 இடங்களைப் பிடிக்க கடுமையான போட்டி நடந்து வருகிறது. 

இதனால் நாளுக்கு நாள் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பும் சுவரஸ்யமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கூ செயலியில் பதிவிட்ட ஆகாஷ் சோப்ரா, “அணிகள் வியர்வை சிதறாமல் ஒரு செயல்திறன் குறைந்த வீரரை வெளியே அமர வைக்கின்றன. அதுவும் சரியான விஷயம். ஆனால் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கு சில வீரர்களை வெளியேற்ற ஒருசில அணிகள் ஏன் தயங்குகின்றன?. அதுவும் ஏலத்தில் அவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல், யார் விளையாடுவது என்பது வரை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடப்பு ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை இவரது கேள்வி நியாயமானதே என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உதரணமாக ஹைதராபாத் அணி தொடர்ந்து சொதப்பி வந்த வார்னர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரை வெளியேற்றிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றன. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் அதேசமயம் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்கள் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பும் பட்சத்தில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி ஆகாஷ் சோப்ரா இப்பதிவினை வெளியிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை