ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (அக்டோபர் 25) அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சிலரும் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். அந்தவகையில், முகமது ஷமி மற்றும் அக்சர் படேல் தவிர, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத மற்றொரு நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடியதுடன், அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு மற்றாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குல்தீப் யாதவை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யாததற்கான காரணத்தையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தனது அறிக்கையில், “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேர்வுக்கு குல்தீப் யாதவ் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக பிசிசிஐயின் சிறப்பு மையத்திற்குச் எல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளது. இந்த அணியில் முகமது ஷமி இடம்பிடிக்காத நிலையிலும், அக்ஸர் படேல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார்.