WI vs ENG: தொடருக்கான புதிய அறிவிப்பு!

Updated: Mon, Mar 07 2022 19:40 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடருக்கு ரிச்சர்ட்ஸ் - போத்தம் கோப்பை தொடர் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்சன் மற்றும் இங்கிலாந்தின் இயான் போத்தம் ஆகியோரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இத்தொடருக்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மேலும் இத்தொடருக்கான கோப்பையை சர் விவியன் ரிச்சர்ட்சன் மற்றும் இயான் போத்தம் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை