வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் , ஐந்து டி20  போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் ஷாய் ஹோப் களமிறங்கினர். 

Advertisement

ஹோப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த போனருடன் கேப்டன் பிராத்வெய்ட் ஜோடி சேர்ந்தார். ஆனால், 15 ரன்கள் எடுத்திருந்த பிராத்வெய்ட்டும் வெளியேற்றினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால், முதல்நாள் ஆட்டத்தின் 40.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய  லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் மற்றும் அடன் மார்க்ரம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

5 பந்துகளை சந்தித்த டீன் எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் (0) ரோச் பந்துவீச்சில் ஆடமிழக்க, அடுத்துவந்த பீட்டர்சென் - மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement

பீட்டர்சன் 19 ரன் எடுத்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய அடன் மார்க்ரம் அரைசதம் கடந்தார். அவர் 60 ரன்கள் எடுத்திருர்ந்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய வென் டர் டஸ்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வென் டர் டஸ்சன் 34 ரன்னுடனும் குயின்டன் டிகாக் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News