WI vs BAN, 2nd ODI: மெஹதி ஹசன், நசும் அஹ்மத் அபாரம்; 108 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!

Updated: Wed, Jul 13 2022 21:36 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கயானாவில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் 18, கைல் மேயர்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடந்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதனைத்தொடர்ந்து ரோமன் பாவல், அகீல் ஹொசைன் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் 35 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களில் சுருண்டது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைபற்றி அசத்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை