வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2அஆவது டெஸ்ட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட்டின் 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்சின் 91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்பல், ஷமாரா ப்ரூக்ஸ், நக்ருமா போனர், ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பிராத்வெயிட் - ஜெர்மைன் பிளாக்வுட் இணை அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினர். அதன்பின் பிளாக்வுட் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் பிராத்வெயிட் 109 ரன்களுடனும், அல்சாரி ஜோசப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News