வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

அடுத்ததாக விராட் கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் விராட் கோலி அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களளுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 121 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, மறுமுனையில் 61 ரன்களை எடுத்திருந்தது ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷன் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News