WI vs IND, 3rd T20I: மேயர்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 165 டார்கெட்!

Updated: Tue, Aug 02 2022 23:13 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக்கத்தை அளித்தனர். இதில் கிங் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 22 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து 73 ரன்களுடன் விளையாடிவந்த கைல் மேயர்ஸும் புவனேஷ்வர் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுதியில் ரோவ்மன் பாவல் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை