WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!

Updated: Mon, Jan 10 2022 10:38 IST
WI vs Ire: Stirling, Getkate to join squad in Jamaica after testing negative for COVID-19 (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும்ம் இடையேயான நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. 

முன்னதாக காரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகியிருந்தனர். 

இதையடுத்து நேற்று அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனால் நாளை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்டிர்லிங் மற்றும் கட்கேட் இருவரும் பங்கேற்பார்கள் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அதேசமயம் சிமி சிங், பென் வைட் ஆகியோர் தங்களது பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதால், அவர்களால் வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்றும் அறிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை