WI vs PAK : மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!
வெஸ்ட் இண்டீஸிலும் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸ் முடிந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டத்தால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்துள்ளனர்.