WI vs SA, 1st T20: லூயிஸ் அதிரடியில் அசத்தல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டிஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிர்க்க அணிக்குக்கு குயிண்டன் டி காக் - வன் டெர் டௌசன் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக வன் டர் டௌசன் 36 ரன்களையும், டிக் காக் 37 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராவோ, ஆலான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரெ ஃபிளட்சர் - எவின் லூயிஸ் இணை எதிரணி பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினர்.
இதில் ஃபிளட்சர் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய எவின் லூவில் 71 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆதிரடி மன்னர்கள் கிறிஸ் கெய்ல் - ஆண்ட்ரே ரஸ்ஸல் இணை தங்கள் பங்கிற்கு மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்தனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலைப் பெற்றுள்ளது.