வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Aug 27 2024 17:22 IST
Image Source: Cricketnmore

West Indies vs South Africa Dream11 Prediction 3rd T20I: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (ஆகஸ்ட் 28) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றுவதுடன், தென் ஆப்பிரிக்க அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - ஆகஸ்ட் 28, நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs SA: Pitch Report

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பேட்டர்களுக்கும் பெரும் சவலாக அமையும் என கணிக்கப்படுகிறது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது 128 ரன்களாக மட்டுமே உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI vs SA: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 25
  • தென் ஆப்பிரிக்கா - 12
  • வெஸ்ட் இண்டீஸ் - 13

WI vs SA: Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப், அலிக் அதானாஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பாவல் (கே), ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்ட், ஷமார் ஜோசப்

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம் (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் ஃபெரீரா, பேட்ரிக் க்ரூகர், நந்த்ரே பர்கர், ஜார்ன் ஃபோர்டுயின், ஒட்னீல் பார்ட்மேன்/லுங்கி இங்கிடி, குவேனா மபாகா.

WI vs SA: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ராஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், ரொமாரியோ ஷெப்பர்ட், பேட்ரிக் க்ரூகர், ரோஸ்டன் சேஸ்
  • பந்து வீச்சாளர்: நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப், அகீல் ஹொசைன்

WI vs SA 3rd T20 Dream11 Prediction, Today Match WI vs SA, WI vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs South Africa

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை