ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பில் சால்ட் 8 ரன்னிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 24 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இதில் ஹாரி ப்ரூக் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஜோ ரூட் எதிரொண்டார்.
அப்போது உள்ளே வந்த பந்தை கணிக்க தவறிய ஜோ ரூட் க்ளீன் போல்டாகினார். ஒரு கணம் அந்த பந்தை எவ்வாறு தவறவிட்டோம் என்பது புரியாம் ஏமாற்றத்துடன் ஜோ ரூட் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டரின் பந்துவீச்சு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித்(வ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(சி), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(டபிள்யூ), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி