இளம் வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி!
ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அந்த அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் வில் புக்கோவ்ஸ்கி. மேலும் அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இடத்தை நிரப்பும் வீரர்களில் ஒருவராகவும் வில் இருந்தார்.
இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, அவரது தலையில் பந்து தாக்கியதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் சூழல் உருவானது. அதன்படி ஒரு பயிற்சி ஆட்டத்தின்போது, வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்தனது வில் புக்கோவ்ஸ்கி தலையில் பன்பயங்கரமாக தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ பரிசோதனையின் முடிவில் வில் புக்கோவ்ஸ்கி பந்து தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மருத்து காரணங்களால் வில் புக்கோவ்ஸ்கி தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
இருப்பினும் அவர் கூடிய வீரையில் தனது காயத்தில் இருந்து குணமடைந்து ஓய்வு முடிவை திரும்ப பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வில் புக்கோவ்ஸ்கி இன்று அறிவித்துள்ளார். ஏனெனில் தான் தொடர்ந்து காயத்தை சந்தித்து வருவதாகும், அதனால் அதிலிருந்து விலகி இருக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான இவர் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் 62 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அத்தொடரில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொடர்ச்சியாக காயத்தை சந்தித்து வந்ததன் காரணமாக ஆஸ்திரேலிய அணியிலும் நிரந்தரமான இடத்தை பிடிக்க தவறினார்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் கடந்தாண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், மீண்டும் தலை பகுதியில் காயத்தை சந்தித்து தற்போது ஓய்வையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட வீரர் ஒருவர் திடீரென மருத்துவ காரணங்களால் ஓய்வை அறிவித்துள்ள நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.