ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி. இவர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட இருந்தார். 

Advertisement

மேலும் இவர் தற்போது ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரான சஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த புக்கோவ்ஸ்கி தலையில் பந்துபட்டு காயமடைந்தார். 

Advertisement

மேலும் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் இன்னும் சரிவர குணமடையாததால், டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. 

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து விக்டோரியா அணி பயிற்சியாளர் கிறிஸ் ரோஜர்ஸ் கூறுகையில், “வில் புக்கோவ்ஸ்கி எதிர்பார்த்த அளவு காயத்திலிருந்து மீளவில்லை. மருத்துவக் குழு மற்றும் தேசிய தேர்வாளர்களுடனான கலந்துரையாடல்களில், அவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், அவருக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News