அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்துகொண்டார் - விராட் கோலி!

Updated: Tue, Oct 25 2022 11:45 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிசெய்தது. 

அதிலும் கடைசி பந்தில் அஸ்வின் யாரும் எதிர்பாராத விதமாக வையிட் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை பாராட்டியுள்ளார்.

போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு பேசிய விராட் கோலி, “ஆட்டத்தில் வெற்றி பெற 15 அல்லது 16 ரன்கள் ஒரு ஓவருக்கு தேவைப்படும் என்ற சூழலில் ஒரு பந்துக்கு 2 ரன்கள் அடித்துவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்து கொள்வார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த உடன் பரபரப்பு தொற்றி கொண்டது.

நான் அஸ்வின் வந்த பிறகு, வரும் பந்தை கவர் திசையில் நோக்கி அடியுங்கள் என்று கூறினேன். ஃபில்டர்களுக்கு எடையில் இருக்கும் இடத்தை பார்த்து அடித்தால், ஒரு ரன் ஓடிவிடலாம், போட்டியை வென்றுவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் நவாஸ் வீசிய பந்தை, அது ஓயிடாக தான் வரும் என்று கணித்து, பந்தை அடிக்காமல் சரியாக நின்றார்.

இதனால் அது ஓயிடாக வந்தது. இப்படி நெருக்கடியான தருணத்தில் அவர் கூலாக நின்றார். உண்மையில் அது ஒரு தைரிமான விசயமாகும். இதனைத் தொடர்ந்து கடைசி பந்தில், அவர் கவரில் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் நேராக சர்கிளுக்கு வெளியே தூக்கி அடித்தார். அஸ்வினுக்கு மூளைக்கு மேல் கூடுதலாக ஒரு மூளை வைத்து செயல்படுகிறார்” என பாராட்டினார்.

இந்திய அணிக்கு இன்று விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆனால் பெரும்பாலான வீரர்கள் இன்று ஓய்வு எடுத்து கொண்டனர். இந்த நிலையில், இந்திய அணி வரும் வியாழக்கிழமை சிட்னியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து பெர்தில் இந்திய அணி வரும் ஞாயிற்றுகிழமை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை