ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

இதில் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறையும் வெற்றி பெறுவதுடன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்காவை நிறைய பேர் விமர்சித்திருக்கிறார்கள், இது உண்மையில் நியாயமில்லை. ஏனெனில் நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணையின் படியே விளையாடுகிறீர்கள். 

மேலும் நாங்கள் எதிர்த்து விளையாடும் அணிகளை தோற்கடித்ததன் காரணமாகவே இப்போது இந்த இடத்தில் உள்ளோம். எனவே தான் நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம். ஆனால் இது மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஈர்த்துள்ளது என்று கூறமாட்டேன். ஆனால் இந்த போட்டி குறித்து அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். இதில் வாய்ப்பு கிடைக்கும் சிலர் தங்கள் பணத்தை செலவழித்து இப்போட்டியை காண லண்டன் செல்வார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அது தென் ஆப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நாங்கள் ஒரு கோப்பையை வெல்லும் வரை அந்த சோக்கர்ஸ் என்ற பெயர் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும். அது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு கடுமையாக இருக்கும். அதனால் இப்போது அவர்களின் எதிர்காலத்தை அவர்கள் தான் தீர்மனிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

தென் ஆப்பிரிக்க அணியானது இதுநாள் வரை எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாததன் காரணமாக கிரிக்கெட்டின் சோக்கர்ஸ் என்றழைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு தொடரிலும் வலிமைமிக்க அணிகளில் ஒன்றாக இருந்த நிலையிலும், அந்த அணியால் இறுதிப்போட்டி வரை மூன்னேறிய நிலையிலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் இந்த போட்டியில் வெற்றிபெற்று தங்கள் தலையெழுத்தை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News