பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங் மூடிவெடுத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கைசியா நைட் 30 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. 

இதனால் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News