WIW vs SAW: விண்டீஸை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!

Updated: Sat, Sep 11 2021 12:38 IST
WIW vs SAW: Laura Wolvaardt, Marizanne Kapp set up easy 9-wicket win (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 44.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வால்வொர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 25.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய லாரா வால்வார்ட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை