இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, லிட்ச்ஃபீல்ட் ஆகியோர் சோற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - பெத் மூனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பெத் மூனி 33 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் 5 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்கக்ப்பட்ட எல்லிஸ் பெர்ரியும் 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய சதர்லேண்ட் அதிரடியாக விளையாடி 50 ரன்களையும், வெர்ஹாம் 37 ரன்களையும் குவிக்க, ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் சோஃபியா டங்க்லி 13 ரன்களுக்கும், கேப்டன் ஹீதர் நைட் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டாமி பியூமண்ட் - நாட் ஸ்கைவர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

அதன்பின் 60 ரன்களில் பியூமண்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸி, டேனியல் வையட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். மறுபக்கம் அபாரமாக விளையாடிய நாட் ஸ்கைவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை களத்தில் இருந்து அணியின் வெற்றிக்காக போராடினார். 

Advertisement

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரங்கனைகளாக இலக்கை எட்ட உதவமுடியவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமனிலைக்கு கொண்டுவந்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News