இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றதுடன் ஆஷஸ் கோப்பையையும் கைப்பற்றியது. 

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே ஏமாற்றமளிக்கும் விதமாக மையா பௌச்சர் 5 ரன்னிலும், டாமி பியூமண்ட் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹீதர் நைட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சோபியா டங்க்லியும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய டேனியல் வைட் 22 ரன்னிலும், ஏமி ஜோன்ஸ் 3 ரன்னிலும், எக்லெஸ்டோன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மெக்டொனால்ட் கெய் 15 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 170 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளையும், கிம் கார்த், டேர்சி பிரௌன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியோ வோல் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் போப் லிட்ச்ஃபீல்ட் 20 ரன்களுடனும், அனபெல் சதர்லேண்ட் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதனையடுத்து 114 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News