மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Feb 06 2022 11:37 IST
Women's Ashes: Perry, McGrath star as Australia defeat England in 2nd ODI (Image Source: Google)

மகளிர் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 45.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்லிஸ் பெர்ரி, தஹிலா மெக்ராத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியும் தொடக்கத்தில் தடுமாறினாலும், எல்லிஸ் பெர்ரியின் அதிரடியான ஆட்டத்தினால் வெற்றி இலக்கை 35 ஓவர்களிலேயே எட்டியது. 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை