மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்படி நேபாள் அணி வீராங்கனைகள் கத்கா 4 ரன்களுக்கும், சிதா ரானா 26 ரன்களிலும், கபிதா குமார் 13 ரன்களிலும், கேப்டன் இந்து பர்மா ரன்கள் ஏதுமின்றியும், ருபினா சேத்ரி 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த பூஜா மஹாதோ - கபிதா ஜோஷி ஆகியோரு ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் புஜா மஹாதேவும் 25 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். 

Advertisement

ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கபிதா ஜோஷி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், நேபாள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சதியா இக்பால் 2 விக்கெட்டுகளைகைப்பற்றினர். அதேமயம் நேபாள் அணியில் மூன்று வீரர்கள் ரன் அவுட் முறையில் மட்டுமே விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு குல் ஃபெரோஸா - முனீபா அலி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல் ஃபரோசா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 105 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தனர். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட குல் ஃபெரோஸா 10 பவுண்டரிகளுடன் 57 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முனீபா அலி ஆட்டமிழக்காமல் 46 ரன்களை குவிக்க, பாகிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News