முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டின் எஃப்டிபியை வெளியிட்டது ஐசிசி!

Updated: Wed, Aug 17 2022 11:36 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று முதல்முறையாக மகளிர் கிரிக்கெட்டின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (எஃப்டிபி) அறிவித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் (2022 முதல் 2025 வரை) 10 அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை உறுதிப்படுத்துகிறது மற்றும் விளையாட்டின் மூன்று வடிவங்களையும் உள்ளடக்கியது.

இதில் இந்திய மகளிர் அணி இக்காலக்கட்டத்தில், 27 ஒருநாள், 36 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. அதேசமயம் இக்காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகளிலும் என இந்தியாவை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் தலா 1 டெஸ்டை விளையாடவுள்ளன. இந்த அட்டவணையில் ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் முதல் மே வரை இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதங்களில் அனைத்து வீராங்கனைகளும் மகளிர் ஐபிஎல், ஹாங்காங்கின் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

எஃப்டிபி எனப்படும் கிரிக்கெட் அட்டவணை முதல்முறையாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 7 டெஸ்டுகள், 159 டி20, 135 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை