ஹர்மன்பிரீத்தின் பேட்டிங் வரிசையை உறுதிசெய்த அமோல் முசும்தார்!

Updated: Fri, Oct 04 2024 09:48 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்குவார் என இந்திய அணி பயிற்சியாளர் அமோல் முசும்தார் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பயிற்சி ஆட்டங்களில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள முகாமிலும், மும்பைக்குப் புறப்படுவதற்கு முன்பும் நாங்கள் ஏற்கனவே ஹர்மன்ப்ரீத் கவுரை மூன்றாம் இடத்தில் தான் களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

அதற்கேற்றவாறு பெங்களூரில் நாங்கள் நடத்திய முகாமின் அடிப்படையில் இதனை முடிவு செய்தோம். அதன் அடிப்படையில், உலகக் கோப்பைக்கு முந்தைய இந்த பயிற்சி ஆட்டக்களில் அவர் மூன்றாம் இடத்தில் களமிறக்கியதுடன், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரால் பந்துவீசவும் முடிவும் என்பதால், தற்போது நாங்கள் அவரை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கௌர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாடியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல் *, சஜனா சஜீவன். ரிஸர்வ் வீரர்கள்: உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை