மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!

Updated: Mon, Feb 20 2023 11:17 IST
Image Source: Google

தென் ஆப்ரிக்கவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்திய மகளிர் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. 

தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக்கில் ஆட்டத்தில் இன்று அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரைஇறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும். 

ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை