WPL 2023: சர்ச்சையில் சிக்கிய நடுவரின் முடிவு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Updated: Mon, Mar 27 2023 11:48 IST
Image Source: Google

இந்தியவில் நடத்தப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்மன்ர்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. 

மும்பை இந்தியன்ஸ் ஆடவர் அணி விளையாடும்போதும், நடுவர்கள் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக அவ்வபோது சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கும் நடுவர்கள் துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை பிடித்த கேட்ச், களத்தில் டச் ஆனதுபோல் இருந்தும், மூன்றாவது நடுவர் உடனே அவுட் வழங்கினார். தற்போது, இறுதிப்போட்டியில்  டெல்லி பேட்டர் ஷஃபாலி வர்மா இடுப்புக்கு வந்த பந்தை தூக்கியடித்தபோது கேட்ச் ஆனார். மூன்றாவது நடுவரிடம் ஷஃபாலி வர்மா முறையிட்டபோது, பந்து இடுப்பு மேலே சென்றது தெரிய வந்தது. 

அப்படியிருந்தும் நடுவர் அவுட் வழங்கினார். இதனால், நடுவர்கள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், ஒருசில சமயம் நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் நடுவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை கொட்டித்தீர்த்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை