WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!

Updated: Wed, Mar 08 2023 21:09 IST
WPL 2023: Harleen Deol's Blistering Fifty Takes Gujarat Giants To 201 Runs Against RCB! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்நே ராணா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்நே ரானா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் காரணமாக முதல் வெற்றியைப் பதிவுசெய்ய கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் மேகனா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சோபியா டாங்க்லி - ஹர்லீன் தியோல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாங்க்லி 18 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து மிரட்டினார். 

பின்னர் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 65 ரன்களை எடுத்திருந்த டங்க்லி ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் 19 ரன்களிலு, ஹேமலாதா 16 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லின் தியோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய குஜராத் அணி 150 ரன்களையும் கடந்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்லீன் தியோல் 45 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 67 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை