டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கோப்பை யாருக்கு?

Updated: Sun, Mar 26 2023 11:41 IST
WPL 2023: I'll encourage the girls to enjoy the final, says Delhi Capitals skipper Meg Lanning (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதில் மும்பை அணி 2ஆவது இடத்தையும், யுபி வாரியர்ஸ் 3ஆவது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4ஆவது, 5ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.நேற்று முன்தினம் இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில்யுபி வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

மகளிர் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

நடப்பு சீசனில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளன. அதிலும் இரு அணிகளும் அதிரடி பேட்டர், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ஆகியோரு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2ஆவது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை