மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து,அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷோஃபி டிவைன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 13 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த சப்பினேனி மேகனா - ரிச்சா கோஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேகனா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய ரிச்சா கோஷ் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிச்சா கோஷ் 12 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஸ்ரேயங்கா பாட்டீல் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 157 ரன்களைச் சேர்த்துள்ளாது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் ராஜேஷ்வர் கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தாஅரவிந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் வ்ருந்தா - தஹ்லியா மெக்ராத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் 18 ரன்களில் வ்ருந்தாவும், 22 ரன்களில் தஹ்லியா மெக்ராதும் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த் கிரேஸ் ஹாரிஸ் - ஸ்வேதா ஷெராவத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிரேஸ் ஹாரிஸ் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களிலும், ஸ்வேதா ஷெராவத் 2 பவுண்டரி, ஒரு சிகச்ர் என 31 ரன்களிலும் ஆட்ட்மிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை கிரண் நவ்கிரேவும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதனால் யுபி அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அதிரடியாக விளையாடி வந்த பூனம் கெம்னார் 14 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியை இறுதிவரை எடுத்துச் சென்ற தீப்தி சர்மாவும் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க தவறினார். 

இதனால் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோபனா ஆஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News