நிக்கி பிரசாத் கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் - மெக் லெனிங்!

Updated: Sun, Feb 16 2025 08:55 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலேயே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி முடிவை தீர்மானிக்கும் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

குறிப்பாக டெல்லி அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை எதிர்கொண்ட அருந்ததி ரெட்டி பந்தை ஆஃப் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சி செய்ததுடன் நூழிலையில் ரன் அவுட்டில் இருந்தும் தப்பி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இன்னிங்ஸின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங், “இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த நாள் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்ம் போது அவர்கள் 200 ரன்களை எட்டுவது போல் இருந்தனர். ஆனால் ஷிகா பாண்டே சிறப்பாக பந்துவீசி எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டுவந்தார். 

அதன்பின் நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பான தொடக்கத்தைக் பெற்றிருந்தோம். இருப்பினும் மும்பை அணி ஒருகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் எங்களை அழுத்ததிற்கு தள்ளினர். நிக்கி ஒரு கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு ராத யாதவும் சிக்ஸர் அடித்து உதவினார். டி20 என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டாகும், இன்று நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்தோம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போட்டி பற்றி பேசினால், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், கேப்டன் ஹர்னம்பிரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Also Read: Funding To Save Test Cricket

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா 43 ரன்களையும், அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் 35 ரன்களையும், ராதா யாதவ் 9 ரன்களையும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை அருந்ததி ரெட்டியும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை